#BREAKING : ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியை எட்டிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரரான லக்ஷ்யா..!
வியாழக்கிழமை நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்ஷயா முதல் செட்டை 21-12 என கணக்கில் கைப்பற்றி அசத்தினார். 2ஆவது செட்டிலும் லக்ஷயா முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், 21-12, 21-6 என்ற கணக்கில் ஹெச்.எஸ். பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்ஷயா சென் காலிறுதியில் 12-ஆம் நிலை வீரரான சீனாவின் சௌ தியென் சென்’னை வீழ்த்தினார். இந்த ஆட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார் லக்ஷ்யா சென்.
ஒலிம்பிக் வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஆண் பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை லஷ்யா சென் பெற்றுள்ளார். வெள்ளிக்கிழமை நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் 22 வயதான சீன தைபேயின் சௌ தியென் சென்னை 75 நிமிடங்களில் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.