#BREAKING : குஷ்பூ ராஜினாமா..!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ல் பாஜகவில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.2023 பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்தார். கடந்த ஜூலை 30ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை துறை சார்ந்த அதிகாரியிடம் வழங்கிய நிலையில், தற்போது ராஜினாமா கடிதத்தை ஏற்றதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சரகம் அறிவித்துள்ளது.