#BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கட்டார்..!
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.
இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.