#BREAKING : முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்..!
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து சற்றுமுன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தனது பதவியை 48 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யப்போவதாக கெஜ்ரிவால் அறிவித்திருந்த நிலையில், இன்று (செப்.17) ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.