#BREAKING : ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி..!
நவ.3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீஸார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின்னர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.