#BREAKING : தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது : கர்நாடக அரசு திட்டவட்டம்..!

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (சி.டபிள்யு.ஆர்.சி.) 88-ஆவது கூட்டம் காணொலி வழியாக புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக உறுப்பினர் கடுமையான வாதங்களை எடுத்துவைத்தார். "மேட்டூர் அணையில் 8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதால் வேளாண்மைக்கு நீர் சென்றடையாமல் பயிர்கள் கருகுகின்றன.
கர்நாடக அணைகளில் 53 சதவீதம் அளவில் 56 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 47 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 80 டிஎம்சிக்கு மேல் தண்ணீரை கர்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டும். இருப்பினும், தற்போதைய நீர் இருப்பு, நீர் வரத்தைக் கணக்கில்கொண்டு, பருவமழை தவறிய பற்றாக்குறை காலங்களுக்கு வழங்க வேண்டிய (20.75 டிஎம்சி) அளவிலான தண்ணீரையாவது வழங்கவேண்டும். இதன்படி விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீரை அக்டோபரில் மீதமுள்ள 15 நாள்களுக்கு வாடும் பயிர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என வாதிட்டார்.
கர்நாடக உறுப்பினர், "தற்போது கர்நாடக அணைகளில் உள்ள 50 சதவீத தண்ணீர் விவசாயம், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலு வந்தடையும் தண்ணீரைத் தவிர கர்நாடக அணைகளிலிருந்து எந்த விதமான தண்ணீரையும் விடுவிக்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்த விவாதங்களுக்குப் பின்னர் சி.டபிள்யு.ஆர்.சி. தலைவர் வினித் குப்தா, "தமிழகத்தின் நிலையைக் கருதி, வருகிற அக்டோபர் 16 முதல் 31-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் வீதம் தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.புதுச்சேரிக்கு விநாடிக்கு 168 கன அடி நீரை இதே காலகட்டத்தில் தமிழகம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுகையில், தமிழகத்திற்கு ஒழுங்காற்றுக் குழு வழங்கிய பரிந்துரையை ஏற்க முடியாது.தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் சூழலில் தான் கர்நாடகாவில் உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் 200 தாலுகாக்கள் வறட்சியில் உள்ளதாகவும், நிலத்தடி பிரச்சனை உள்ளதால் நீர் மின்சாரம் தேவை அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் கர்நாடக சார்பாக செய்யப்படும் எனவும் கூறினார்.