#BREAKING: கமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள குவகாத்தி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 ஏசி பெட்டிகள் தடம் புரண்டன.
ஒடிசாவில் கத்தக் அருகே நெர்குண்டி ரயில் நிலையத்தில் காமாக்யா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 AC கோச்சுகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்கவும், தண்டவாளத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊர்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது
ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவி எண்கள் : 8455885999 மற்றும் 8991124238 . இந்த எண்களை தொடர்பு கொண்டு பயணிகள் உதவி பெறலாம். மேலும் , பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.