BREAKING: கள்ளக்குறிச்சி சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் 67 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ.20) தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.