#BREAKING : நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் காலமானார்..!

பாலிவுட் நடிகையும் இலங்கை பிரஜையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாயார் காலமானார்.
மகாராஷ்டிராவில் வசித்து வரும் ஜாக்குலினின் தாயார் கிம் பெர்னாண்டஸ் இன்று (ஏப்., 06) உடல்நலக்குறைவால் காலமானார். சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் 24 அன்று, மாரடைப்பு காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. நடிகை ஜாக்குலின் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது