#Breaking அது என்னுடைய அறிக்கை அல்ல ஆனால் உடல்நலம் பற்றிய தகவல் உண்மை

சமூக வலைதளத்தில் பரவி வரும் கடிதம் என்னுடைய அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரஜினி அறிக்கை ஒன்று மக்களிடம் வேகமாக பரவியது, இதனால் ஊடங்களிலும் இது வேகமாக பரவியது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அந்த அறிக்கை என்னுடைய அறிக்கை அல்ல என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதவிட்டுள்ள ரஜினிகாந்த், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீயாய் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020