#BREAKING : ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!
தமிழகத்தில், நாளை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.