#BREAKING தமிழகத்தில் கொரோனா அடுத்த அலை எழுந்துள்ளதா? அதிகரிக்கும் தொற்று!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சற்று குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 5,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5.25 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்களை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் 596 பேரும், சேலம் மாவட்டத்தில் 378 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 202 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
newstm.in