#BREAKING : ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான வட்டி ரத்து..!
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
- ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான வட்டி ரத்துபெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை முன்னிறுத்தி நமது கொள்கைகள் அமைந்துள்ளன - நிதியமைச்சர்
- இலவச உணவு தானிய திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது
- நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளன
- நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 4%ஆக சரிவடையும்
- கல்வி, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
- அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்
- பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
- காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்யத் திட்டம்
- நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்
- நாட்டில் உள்ள வேளாண்துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
- அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு: நிர்மலா சீதாராமன்
- இளைஞர்கள் நலனிற்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது
- அடக்க விலையை காட்டிலும் 20% லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது
- விவசாயத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இனைந்து நடவடிக்கை
- பருவ நிலையை தாக்குபிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
- 4.1 கோடி இளைஞர்களின் முன்னேற்றதுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
- வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 3 திட்டங்கள் அறிமுகம்
- முதல் திட்டத்தின்படி முதன்முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்
- 20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் 1,000 பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்
- வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்
- பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்
- மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
- நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும்
- புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.15000 முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- 20 லட்சம் இளைஞர்களுக்கு வழங்க புதிய திட்டம் உருவாக்கப்படும்.
- பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும்.
- பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
- பீகாரில் பாலங்கள், சாலைகள் சமைக்க ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
- ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஆந்திராவில் தலைநகர் நிதி சார்ந்து ரூ.5000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
- கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள்
- விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு