#BREAKING : இந்திய பேட்மிண்டன் வீரருக்குத் தடை!
ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தை 18 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் விரைவில் தொடங்க உள்ள பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் பிரமோத் பகத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.