#BREAKING : இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 30 ரன்களும், சுப்மன் கில் 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான நிலையில், விராட் கோலி ஒரு ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஜெய்ஷ்வால் 77, ஜடேஜா 42 மட்டும் ஓரளவு சிறப்பான ரன்களை எடுத்தனர். நியூசி., இரு இன்னிங்ஸ்களில் முறையே 259 & 255 ரன்களும், இந்தியா 156 & 245 ரன்களும் எடுத்தது.