1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 2வது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

1

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலும் களம் காண்கின்றன. இதில் முதலாவது டி20 போட்டியானது பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற்ற நிலையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் (DLS முறை) வீழ்த்திய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இலங்கையை 21 முறை வீழ்த்தி, ஒரு அணிக்கு எதிராக அதிக டி20ஐ வெற்றிகளை பதிவு செய்து இந்தியா தனது சாதனையை முறியடித்தது. இலங்கை மொத்தமாக 161/9 எடுத்தது. மழைக்குப் பிறகு 8 ஓவர்களில் 78 ரன்கள் என திருத்தப்பட்ட இலக்கை இந்தியா 6.3 ஓவர்களில் எட்டியது. 

Trending News

Latest News

You May Like