#BREAKING : தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!
தமிழ்நாட்டில் 40 இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் ரெடிமிக்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் ‛ அ' பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் வீடுகள் மற்றும் அவரின் பெட்ரோல் பங்க், ஆர்.ஓ., வாட்டர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி சாலை பணி ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான ஆர் எஸ் முருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்
சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள வீடு ஒன்றிலும் சோதனை நடந்தது.