#BREAKING : 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை..!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அரசு இந்த விடுமுறையை நீட்டித்துள்ளது.