#BREAKING : சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கில் 720 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் நாகையில் இருந்து 520 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.இது நாளை காலை புயலாக மாறும் என்றும், இதற்கு ஃபெங்கால் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தூரத்தில் மைய கொண்டிருக்கிறது. முன்னதாக 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது வேகம் 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் இதுவரை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு லீவ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.