#BREAKING : நாளை 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் உறுதி செய்துள்ளார். வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று அவர் கணித்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தற்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் கனமழை எச்சரிக்கையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் விபரம் வருமாறு:
- கனமழை காரணமாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூரில்,திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (நவ.27) பள்ளிகளுக்கு விடுமுறை!
- கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
- மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
- கடலூர் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.அதேபோல் கடலூர் அரசு கலை கல்லூரியில் நாளை நடைபெற இருந்த கூட்டுற சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடக்கும் என்று கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாள விநாயகன் தெரிவித்துள்ளார்.
- கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக இந்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.