#BREAKING : மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!
நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அனைத்து தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நாளை(அக்.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.