#BREAKING : ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்..!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஞ்சியின் பார்கெய்ன் பகுதியில் ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக சோரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஹேமந்த் சோரனை கைது செய்தனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரி, ராஞ்சி நகர முன்னாள் துணை ஆணையர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.