1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது! நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல் ஆழமாக வேரூன்றி உள்ளது..!

1

 சினிமாத்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக 2018-ம் ஆண்டு மே மாதம் நீதிபதி ஹேமா தலைமையில், நடிகை சாரதா, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கமிஷன் ஏற்படுத்தப்பட்டது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி நீதிபதி ஹேமா கமிஷன், தனது அறிக்கையை கேரள மாநில அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும், அந்த அறிக்கை சுமார் நான்கரை ஆண்டுகளாக வெளியாகாமலேயே உள்ளது.

நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் சில நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களும் உள்ளதால் அதை வெளியிட தாமதம் ஆகியிருக்கிறது. அதே சமயம், ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும் என சினிமா நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி உள்ளிட்டவை வலியுறுத்தின.

இந்த நிலையில், தகவல் உரிமை ஆணையம் தலையிட்டு ஹேமா கமிஷன் அறிக்கையில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் தவிர்த்து பிற அறிக்கைகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்தே அறிக்கை வெளியிடப்படும் என கேரள அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கேரள அரசு வெளியிட்டது

திரைப்பட செட்களில் மது மற்றும் போதைப் பொருட்களைத் தடை செய்தல், பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதி செய்தல், பணியாளர்களின் பின்னணி குறித்து சோதனை செய்தல் போன்ற பரிந்துரைகளையும் ஹேமா கமிஷன் வழங்கியுள்ளது.பெண்களை மரியாதையுடன் நடத்துதல், சம ஊதியத்தை உறுதி செய்தல் மற்றும் செட்களில் கொச்சையான வார்த்தைப் பிரயோகத்தை ஒழித்தல் உள்ளிட்டவைகளையும் ஹேமா கமிஷன் பரிந்துரை.

மலையாள திரையுலகில் காஸ்டிங் கவுச் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. திரையுலகில் வெளித்தோற்றம் மட்டுமே. வாய்ப்பைப் பெறுவதற்காக சமரசத்துக்குத் தயாராக இருக்குமாறும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

பிரச்னைகளுக்கு தீர்வு காண வலுவான சட்டம் அவசியம் என்றும், தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் நீதிபதி கே.ஹேமா பரிந்துரை செய்துள்ளார் திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், வேறு வழிகளில் சுரண்டப்படுவதாகவும் பலர் நேரடியாகவும். மறைமுகமாகவும் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பெரும்பாலும் கழிவறைகளோ, உடை மாற்றும் வசதிகளோ இருக்காது இதுபற்றி கேட்டால் மோசமாக நடந்துகொள்பவர்கள் இருப்பதாக கமிஷனில் சிலர் புகார் தெரிவித்தனர். 

Trending News

Latest News

You May Like