#BREAKING : தமிழ்நாட்டில் கனமழை : அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும.
தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.