#BREAKING : அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது..!
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், 12ம் வகுப்புக்கு டிச.9ம் தேதி தேர்வு தொடங்கி டிச.23ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 10ம் வகுப்பிற்கு டிச.10ம் தேதி தேர்வு தொடங்கி டிச.23ம் தேதி முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;
டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்
டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை -- கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல்
அதேபோல 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது. இதன் பின்னர் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.