1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை..!

1

நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ம் ஆண்டு முதல் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி எனவே, இத்தகைய போதைப்பொருட்களை உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.


குட்கா, பான்மசாலா ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல்  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குட்கா பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றிற்கான தடையை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு 2025 மே 23 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like