#BREAKING : ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்ட நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசு ஊக்கத்தொகையாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் இந்த ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.