#BREAKING :- தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை..!

நவ.1ம் தேதி (தீபாவளிக்கு மறுநாள்) அரசு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சனி, ஞாயிறு வருவதால், தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை கிடைத்துள்ளது.