1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பஞ்சு மிட்டாய் தொடர்ந்து கோபி மஞ்சூரியனுக்கு தடை..!

1

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் என்றால், சைவ பிரியர்களுக்கு, கோபி மஞ்சூரியன் தான் விருப்ப உணவு. காலி பிளவரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த உணவை, சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவர்.

இந்நிலையில் கோபி மஞ்சூரியனில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் அதன் சுகாதார பிரச்னைகள் தொடர்பான சந்தேகங்க சந்தேகங்கள் காரணமாக, அந்த உணவுக்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் விற்பனையான பஞ்சு மிட்டாயை, தமிழக அரசு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் புற்றுநோயை உண்டாகும் "ரோடமைன் பி" ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, பஞ்சு மிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. தற்போது, அங்கு வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் மட்டுமே விற்கப்படுகிறது.இதுபோன்று, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடகா முழுதும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் மாதிரிகளை ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர்.ஆய்வு அறிக்கையை, மாநில சுகாதார துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். அதில், மாநிலம் முழுதும் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்ட 170க்கும் மேற்பட்ட மாதிரிகளில், 100க்கும் மேற்பட்டவைகளில், பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் ரோடமைன் பி மற்றும் கோபி மஞ்சூரியனில் சன்செட் எல்லோ கலர் மற்றும், டாட்ராசின் ஆகிய ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. 

இதையடுத்து புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு வித்திடும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்தது கர்நாடக சுகாதாரத்துறை. மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது 

Trending News

Latest News

You May Like