1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : போக்குவரத்து ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Q

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023-க்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கும் மேல்பணிபுரிந்தவர்களுக்கு625 வழங்கவும் 151 - 200 நாட்களுக்கு பணிபுரிந்தவர்களுக்கு ₹195 வழங்கவும், 91 -150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ₹85   வழங்கவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like