#BREAKING : ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! 78 நாள் போனஸ் அறிவிப்பு ..!

ஆண்டு தோறும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் வெகுமதியாக போனஸ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 78 நாட்கள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ட்ராக் மெயின்டெய்னர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (காவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அமைச்சக ஊழியர்கள் மற்றும் பிற குரூப் 'சி' ஊழியர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.
11.07 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போன்ஸ் ஆக ரூ.1,968.67 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.