1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி..! ஒரே நாளில் ரூ.2,360 குறைந்தது..!

Q

தங்கம் விலை அண்மையில் சிறிது நிலையாக இருந்தது. சரி இனி தங்கத்தின் விலை இறங்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்த சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் ஆசிய பகுதியில் போர் பதற்றம் தணிந்தது. இது தவிர அமெரிக்கா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 90 நாட்களுக்கு 30 சதவீதமாக குறைக்க சீனாவும் முடிவு செய்தது. இதுதவிர அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது இது போன்ற காரணங்களால் இன்று தங்கத்தின் விலை குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கடும் விலை சரிவை அடுத்து, தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை குறைந்துள்ளது. காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.71,040-க்கு விற்பனையான நிலையில், மாலையில் மேலும் ரூ.1,040 குறைந்துள்ளது. தற்போது, ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-க்கும், ஒரு கிராம் ரூ.8,750-க்கும் விற்பனையாகிறது.

Trending News

Latest News

You May Like