1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வங்கி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!விரைவில் ஊதிய உயர்வு

1

2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ஐந்து நாள் வேலை வாரத்திற்கான கோரிக்கை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை பல மாதங்களாக வைத்து வந்த நிலையை, அனைத்து சனிக்கிழமைகளையும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளது.

அப்படி  வாரத்தில் 5 நாள் வேலை வார இறுதி நாள் விடுமுறை என வந்தால் வங்கிகள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டி வரும். மாற்றங்கள் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பகால சிரமங்கள் ஏற்படும்.

இந்நிலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

மேலும் ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு அமலாகும். இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ₹7,898 கோடி கூடுதல் செலவாகும் என கணிப்பு!

Trending News

Latest News

You May Like