1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு..!

Q

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கபட உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்பதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 53 சதவீதமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இனிமேல் 55 சதவீதமாக இருக்கும். மத்திய அரசின் முடிவால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like