#BREAKING : ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம்..!

நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஒரேநாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.520 மாலையில் ரூ. 200 என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன்மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.67,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.8450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.