1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!!

Q

தங்கம் விலை இன்று காலை (29-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஒரே நாளில் 2-வது முறையாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் 86,160க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் 10,770க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் சவரனுக்கு 1,040ம், கிராமுக்கு ரூ.130ம் அதிகரித்துள்ளது. அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160 (இன்று மாலை)
29.09.2025 ஒரு சவரன் ரூ.85,600 (இன்று காலை)
27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080

Trending News

Latest News

You May Like