1. Home
  2. தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது..!

Q

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எல்பிஜி விலையை மதிப்பாய்வு செய்கின்றன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் (14.2 கிலோ) விலையில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

 

இந்நிலையில் புத்தாண்டு இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்திருக்கிறது. 

 

வர்த்தக உபயோக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த சிலிண்டரின் விலை ரூ.1,980,50ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை ரூ.1966ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் சிலிண்டர் விலை 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த 1ஆம் தேதி அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like