1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து 4 மாணவர்கள் பலி..!

1

ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில்  உள்ள பிப்லோடி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. காலை 9 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது, சுமார் 60 முதல் 70 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், 4 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாகவும், சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
 
இதில், 4 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாகவும், சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
 
நீண்ட காலமாக பள்ளிக் கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், அதனை சீர் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.

Trending News

Latest News

You May Like