1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள் உதயமானது..!

Q

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு செய்து கொடுக்கவும், பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளை இணைத்து, பெரு நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தியதற்காக காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர். கே.என்.நேரு கடந்த ஜூன் மாதம் மசோதா தாக்கல் செய்தார்.

இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயரும். பொதுமக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகளை CM ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

 

புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 4 நகராட்சிகள் இன்று முதல் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like