#BREAKING : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் காலமானார்..!
மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(வயது 84) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து அவரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. சென்னை கோபாலபுரத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்படுகிறது.
கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வத்தை தான், முதலமைச்சர் ஸ்டாலினின் தங்கையான செல்வி திருமணம் செய்திருந்தார். 83 வயதான முரசொலி செல்வம், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.