#BREAKING : முன்னாள் தமிழக தேர்தல் ஆணையர் மலைச்சாமி காலமானார்..!
முன்னாள் உள்துறை செயலாளராகவும், முன்னாள் தமிழக தேர்தல் ஆணையராக இருந்தவர் மலைச்சாமி ஐ.ஏ.எஸ்., இவர் அ.தி.மு.க., சார்பில் ராமநாதபுரம் எம்.பி.,யாகவும், ராஜ்ய சபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், இவர் இன்று மதியம் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கவிருக்கிறது.