#BREAKING : முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம்.!

ஆதரவாக ஒரு கோடி கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப பாஜக திட்டமிட்டுள்து. இந்த கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து பெறும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் பாஜகவின் மும்மொழிக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்,
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம் குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் கூறியதாவது: பா.ஜ.,வினர் வற்புறுத்திய காரணத்தினால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டேன். இது குறித்து எனது தரப்பு கருத்தை பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., யிடம் தெரிவிப்பேன், என்றார்