1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்..!

Q

திமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

 

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த 1991 – 96ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். அப்போது காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டார். ஜெயலலிதாவிற்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் ‘ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏ’ என்று அப்போது அவர் வர்ணிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் சேவாதள அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த அவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதனால் அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் தலைமையில் இருப்பது ‘கருணாநிதி காங்கிரஸ்’ என கோவை செல்வராஜ் சொல்ல, ஆதாரத்துடன் டெல்லிக்கு தகவல் பறந்தது. 
அப்போது தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. கூட்டணி கட்சியையே விமர்சித்ததால் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டார். முன்னதாக 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டப்போது அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்து அதிர வைத்தார். 
காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவுக்கு சென்ற கோவை செல்வராஜூக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அதனை எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். சமீபத்தில் அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகளாக பிரிந்தது. 
அப்போது ஓபிஎஸ் அணியில் இடம் பெற்று எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக தாக்கி பேசினார்.
அதன் பின் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். அவருக்கு சமீபத்தில் திமுக செய்தித் தொடர்புத் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவை திமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது மகன் திருமண விழாவை முடித்துவிட்டு காரில் இருந்து கீழே இறங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending News

Latest News

You May Like