#BREAKING : கோவை முன்னாள் மேயர் தா. மலரவன் காலமானார் - ஓபிஎஸ் இரங்கல்..!

கோவை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான தா. மலரவன் காலமானார்.
2001முதல் 2006 வரை மேயராகவும்,2006-2011 வரை கோவை மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும்,2011-2016 வரை வடக்கு சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தவர் டி.மலரவன்.
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் இவரின் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கலை தெரிவித்துள்ளார்
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக திறம்பட பணியாற்றிவரும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றியவரும் மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவருமான திரு. தா. மலரவன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
திரு. மலரவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக திறம்பட பணியாற்றிவரும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றியவரும் மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவருமான திரு. தா. மலரவன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 17, 2024
திரு. மலரவன் அவர்களை இழந்து…