#BREAKING : கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்..!
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் காலமானார்
கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத்திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
இவர் 2006 - 11 வரை கேரள முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.