#BREAKING : முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது..!

கர்நாடகாவில் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சியான பாஜக நேற்று (ஏப்.2) மதியம் முதல் 24 மணிநேர தொடர் போராட்டத்தை விடுதலை பூங்காவில் தொடங்கியது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று போராட்டக்காரர்கள் முதல்வர் சித்தராமையா வீட்டை முற்றுகையிட முயன்றதால் எடியூரப்பா உள்ளிட்ட நிர்வாகிகளை காவலர்கள் கைது செய்துள்ளனர்.