1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்..!

1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெயிக்வாட் சற்றுமுன் காலமானார்.அவர் வயது 95.
 
பரோடாவில் உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் கிரிக்கெட் விளையாடும் 10 வயது சிறுவன், இந்திய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவர் அந்த கனவை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் பத்தாவது டெஸ்ட் கேப்டனாகவும் மாறினார். கேப்டன் பதவி கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்த்த ஒன்று அல்ல. 1959 இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அணியை வழிநடத்த முதலில் பெயரிடப்பட்ட ஹேமு அதிகாரி விலகினார், இதனால் தத்தாஜிராவ் கிருஷ்ணராவ் கெய்க்வாட் இந்திய கேப்டனானார். அவர் விளையாடிய 11 டெஸ்டில் நான்கில் இந்தியாவை வழிநடத்தினார். இந்திய அணிக்காக 20 இன்னிங்ஸ்களில் அரை சதம் உட்பட 350 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவின் மிக வயதான கிரிக்கெட் வீரர் என கருதப்படும் அவர் ரஞ்சி டிராபியில் 3,139 ரன்கள் (14 சதங்கள்) குவித்த சாதனை படைத்திருக்கிறார்.

முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், தத்தாஜிராவ் காலமான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார்.



 

Trending News

Latest News

You May Like