#BREAKING : விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்..!

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கியது.
AI171 என்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதுடன், குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.