1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் தோல்வி..!

1

தமிழகத்தை பொறுத்தவர 4 முனை போட்டி நடக்கிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. 

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்தடுத்து தமிழக அரசியலில் பின்னடைவே ஏற்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சி, சின்னம், கொடிகளை பயன்படுத்தக்கூடாது என அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு என கூறி வந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு பாஜக கூட்டணியிலும் சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூட தோல்வி அடையாத ஓ பன்னீர் செல்வம், இதனால் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்தர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 4 சுற்றுகள் முடிவில், திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் இரண்டாம் இடத்தில்  இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றுஉள்ளார். ஒரு முறை கூட தோற்காத ஓபிஎஸ்க்கு முதல் தோல்வியாக பார்க்கப்படுகிறது  
 

Trending News

Latest News

You May Like