1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அதிமுக முன்னாள் எம்.பி காலமானார்..!

1

நீலகிரி முன்னாள் அதிமுக எம்பியாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன் (63). இவர் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டறை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று காலை வீட்டில் இருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவர் இறந்த தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டில் குவிந்தனர்.பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இன்று மாலை வெலிங்டன் பகுதியில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.

உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 2014-ம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசாவை தோற்கடித்து எம்.பி.யானார்.

இவர் அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.இறந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு சுசிலா என்ற மனைவியும், அப்சரா என்ற மகளும் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like